சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வீரர்கள் யோகா செய்தனர். தரையில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் பனி படர்ந்த ரோஹ்தாங் பாஸில் அவர்கள் யோகா செய்தனர்.
இதேபோல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களும் யோகா செய்தது.