அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக இன்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளனர்.