பா.ஜ.க. கூட்டணி குடியரசுத்தலைவர் வேட்பாளர் அறிவிப்பு..!

பா.ஜ.க. கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்தார் ஜே.பி.நட்டா

பா.ஜ.க கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுவார் என்று அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண் ஆளுநராக பொறுப்பு வகித்தவர் திரௌபதி முர்மு

மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றவர் திரௌபதி முர்மு

17 எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க . வேட்பாளர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

இரு தரப்பும் ஒரே நாளில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் திரௌபதி முர்மு பெயர் அறிவிப்பு

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.