பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு: பழங்குடி சமூக பெண் திரவுபதி முர்மு

Draupadi Murmu named NDA’s candidate for Presidential polls: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரௌபதி முர்மு குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசு தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசு தலைவராக ஆவார்.

ஜூன் 20, 1958 இல் பிறந்த திரெளபதி முர்மு 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார்.

முர்மு ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றும் பழங்குடி சமூகத்தில் இருந்து வந்த முர்மு, ஆசிரியராகத் தொடங்கி, பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்தார். அவர் மயூர்பஞ்சின் (2000 மற்றும் 2009) ராய்ராங்பூரில் இருந்து பா.ஜ.க சார்பில் இரண்டு முறை எம்எல்ஏ ஆனார்.

அவர் தனது அரசியல் வாழ்க்கையில் கட்சிக்குள் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கவுன்சிலராக வெற்றி பெற்று 1997 இல் ஒடிசாவின் ராய்ராங்பூரின் துணைத் தலைவராக ஆனதன் மூலம் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

முர்மு 2013 முதல் 2015 வரை பா.ஜ.க கட்சியின் எஸ்டி மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

அதே ஆண்டு, அவர் பாஜகவின் எஸ்டி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முர்மு ஒடிசாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பல்வேறு அமைச்சகங்களை கையாண்டுள்ளார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: “திருமதி. திரௌபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். அவர் திறமையான நிர்வாக அனுபவம் உடையவர் மற்றும் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.