பிரித்தானியாவில் வேகமெடுக்கும் குரங்கம்மை தொற்று: பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்


பிரித்தானியாவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500 கடந்துள்ள நிலையில் மெய்ட்ஸ்டோன், ப்ரோம்லி மற்றும் லெய்செஸ்டர் ஆகிய பகுதிகளில் பலருக்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜூன் 17ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக 46 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 574 எனவும், புதுப்பிக்கப்பட்ட எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வேகமெடுக்கும் குரங்கம்மை தொற்று: பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்

இதனிடையே ஜூன் 8ம் திகதியில் இருந்தே குரங்கம்மை பாதிப்பு தொடர்பில் சந்தேகம் எழும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவர்களை நாட கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை வெளியானதைவிடவும் அதிகமிருக்கலாம் எனவும், உறுதி செய்யப்பட தொற்றாளர்கள் தகவல் அளிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 14 வரையில் ஒட்டுமொத்த பிரித்தானியாவில் 524 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 5ம் திகதி முடிய லெய்செஸ்டர், நியூஹாம்,
வைகோம்ப் ஆகிய பகுதிகளில் குரங்கம்மை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வேகமெடுக்கும் குரங்கம்மை தொற்று: பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்

ஜூன் 12 ம் திகதி முடிய மொத்தம் 12 பகுதிகளில் குரங்கம்மை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே, எவருக்கு வேண்டுமானாலும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்படலாம் எனவும், உடல் ரீதியான நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும், தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் அல்லது ஆண்களுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை தொற்றாளர்களில் 81% பேர்கள் லண்டன்வாசிகள் எனவும் 99% பேர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.