கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள நிட்டூர் என்ற கிராமத்தில் முதியோர் பென்ஷனுக்காக அலைகழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி ஒருவர் கிராம அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பெண்மணி நடந்தே வந்ததாகவும், கிராம அலுவலகத்தில் கணக்காளர் இல்லாததால் மேலும் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சோர்வடைந்திருந்த அவர் தொடர்ந்து காத்திருந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்த மக்கள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சரியான நேரத்தில் பணிக்கு வராத அந்த கணக்காளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.