பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா கால வரையறை இன்றி பின்போடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டமளிப்பு விழாவை பின்போட நேர்ந்ததாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
போக்குவரத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டதும், பட்டமளிப்பு விழாவிற்கான புதிய திகதி தீர்மானிக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்குரிய பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம்இ 30ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.