மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பில் பாஜக மும்முரம்! விலைபோன அமைச்சர் உள்பட22 சிவசேனா எம்எல்ஏக்கள்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது. சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் இருந்த 21 எம்எல்ஏக்கள் பாஜக தனவசப்படுத்தி குஜராத்தில் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும்  சிவசேனை கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் ‘திடீரென தலைமறைவாகி உள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில பேரவைத் தேர்தலில்  பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. பாஜக 106 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. சட்டப்பேரவையில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சிவசேனை -56  தேசியவாத காங்கிரஸ் -53, காங்கிரஸ் -44, பாஜக – 106 எம்எல்ஏக்களை கொண்டுள்ளனர். ஆனால், பாஜக சிவசேனா இடையே எழுந்த பதவி சண்டையால், பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தர மறுத்து விட்டது. இதனால், சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அவ்வப்போது இந்தக் கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும்  கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமேலவையில் காலியான இடங்களுக்கு  தேர்தல் நடைபெற்றது..மொத்தமுள்ள 10 இடங்களில் பாஜக 5 இடங்களைக் கைப்பற்றியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் 106 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் 5 பேர் வெற்றி பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் ஆளும் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா இரு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவந்தனர். பாஜக குதிரை பேரத்தில்  ஈடுபட்டுள்ளதாக சிவசேனா உள்பட ஆளும் கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில்,  சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்எல்ஏக்கள் திடீரென தலைமறைவான கூறப்படுகிறது. இது  மகாராஷ்டிர அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் குஜராத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்  சில சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது போல், மகாராஷ்டிர மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாஜகவின் அந்த சதித்திட்டம் இங்கு நடக்காது. சூரத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை வெளியே விடாமல் சிலர் தடுக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா தலைமை கொறடா பதவியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும்வரவில்லை என்றவர், இதுதொடர்பாக பாஜக தலைமையிடம் இருந்தோ,  ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவு வரவில்லை என்று மறுத்தவர்,  அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார்.

இந்த நிலையில்,  முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அமைச்சர்  ஏக்நாத் ஹிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களன்  முடிவால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு இடையில், முன்னாள் முதலமைச்சரும், மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். சிவசேனை எம்எல்ஏக்கள் தலைமறைவான விவகாரம்  மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.