முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து-ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பள்ளிகள் திறப்பின் போது பள்ளி குழந்தைகளுடன் வகுப்பறையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து, முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து ஆபாசமாக அவதூறு கருத்தை பதிவிட்டுள்ளார்.
image
image
இது குறித்து குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் ஜெபா ஜான் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், அவதூறு கருத்து வெளியிட்ட ராஜேஷ் மீது சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு கருத்துக்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.