மைண்ட் ட்ரீ நிறுவனம் குறித்த முக்கிய முடிவெடுத்த லார்சன் & டூப்ரோ: பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்

மைண்ட் ட்ரீ நிறுவனம் குறித்த முக்கிய முடிவை L&T நிறுவனம் எடுத்து உள்ளதை அடுத்து பங்குதாரர்களுக்கு ஜாக்பாட் கிடைத்து உள்ளதாக கருதப்படுகிறது.

L&T நிறுவனம் மற்றும் மைண்ட் ட்ரீ நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு செயல்முறை இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்றும் அது வரை இந்த இரண்டு நிறுவனங்களும் சுதந்திரமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்!

L&T  நிறுவனம்

L&T நிறுவனம்

L&T நிறுவனம் கடந்த மாதம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை தாண்டி திறமையான மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு மெகா இணைப்பு குறித்த அறிவிப்பு இரு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

L&T மற்றும் மைண்ட் ட்ரீ  இணைப்பு

L&T மற்றும் மைண்ட் ட்ரீ இணைப்பு

L&T மற்றும் மைண்ட் ட்ரீ நிறுவனங்களின் இணைப்பு செயல்பாடுகள் முடிந்தவுடன், மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும் L&T இன்போடெக் நிறுவனத்தின் 73 பங்குகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணைந்த நிறுவனத்தில் 68.7% வைத்திருக்கும் என்றும் தெரிகிறது.

மைண்ட் ட்ரீ
 

மைண்ட் ட்ரீ

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குகளை L&T நிறுவனம் 2019ஆம் ஆண்டு வாங்கியது என்பதும், அதுமுதல் இரண்டு நிறுவனங்களும் தனித்தனியே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணைப்பு எப்போது?

இணைப்பு எப்போது?

அடுத்த 2 நிதி காலாண்டுகளில் இந்த இணைப்பு முடிவடையும் என்று நம்புகிறோம் என்றும் இந்த இணைப்பு ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளது என்பதால் அது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் L&T இன்போடெக் தலைமை இயக்க அதிகாரி நச்சிகேத் தேஷ்பாண்டே அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐடி சேவை

ஐடி சேவை

இந்த இணைப்பு குறித்து மேலும் கருத்து தெரிவித்த நச்சிகேத் தேஷ்பாண்டே அவர்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐடி சேவைகளுக்கான பணிகளின் தேவை அதிகமாக இருக்கும் என்றும் ஒரு சில காலாண்டுகளில் விநியோக தடைகள் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மந்தநிலை

மந்தநிலை

ஒரு நிறுவனத்தில் மாற்றம் தொடங்கினால் அதை பாதியில் நிறுத்த முடியாது என்றும் மந்த நிலை போன்ற அச்சங்கள் இருந்தபோதிலும் நாங்கள் பேசிய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தகவல் தொழில்நுட்ப செலவினங்களை குறைக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

புதிய அலுவலகங்கள்

புதிய அலுவலகங்கள்

மேலும் L&T நிறுவனம் இந்தியாவில் இன்னும் பல இடங்களில் தனது தடத்தை பதிக்கும் என்றும் புதிய அலுவலகங்களை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் மதிப்பீடு குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வேலை

மக்களுக்கு வேலை

மேலும் L&T இன்போடெக் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்வதைவிட வேலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம் என்றும் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

புதிய 5000 பணியாளர்கள்

புதிய 5000 பணியாளர்கள்

L&T இன்போடெக் நிறுவனம் தனது முதல் மையத்தை கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தது என்பதும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கிழக்கு பிராந்தியத்தில் 4,000 முதல் 5,000 பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

L&T Infotech and Mindtree merger by this year end

L&T Infotech and Mindtree merger by this year end | மைண்ட் ட்ரீ நிறுவனம் குறித்த முக்கிய முடிவெடுத்த லார்சன் & டூப்ரோ: பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்

Story first published: Tuesday, June 21, 2022, 9:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.