வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு, பன்முகத்தன்மைக் கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் உள்ள ஒரு கிராம மக்களின் கடிகாரம் பின்னோக்கி இயங்கும் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?
பொதுவாகவே பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள் புதுமையான, மாறுபட்ட வழக்கங்களை கொண்டவர்களாகவே இருப்பர். அந்த வகையில் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்ட் என்ற மலைவாழ் மக்கள் பின்னோக்கி இயங்கும் கடிகாரங்களையே காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
வழக்கமாக கடிகாரங்கள் க்ளாக்வைஸில் அதாவது வலமிருந்து இடப்புறமாக சுற்றும். ஆனால் கோண்ட் மலைவாழ் மக்களின் கடிகாரங்கள் இடமிருந்து வலப்புறமாக சுற்றும். அதாவது நமக்கெல்லாம் பகல் 12 மணிக்கு பிறகு 1 மணியாக இருந்தால் அவர்களுக்கு அது காலை 11 மணியாக இருக்கும்.
இந்த கோண்ட் மலைவாழ் மக்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி சக்தி பீடம் என்ற சங்கத்தோடு தொடர்பில் உள்ளவர்கள். கோண்ட் மக்களை பொறுத்தவரை பூமி இடமிருந்து வலமாக சுற்றுவதாகவும், சந்திரனும் புவியை இடமிருந்து வலப்புறமாகத்தான் சுற்றுவதாக நம்புகிறார்கள். திருமண சடங்குகளின் போது கூட கோண்ட பகுதியில் உள்ள anticlockwise ஆக தான் மணமக்கள் சுற்றுவார்களாம்.
தாடி வைத்தால் திருமணத்துக்கு தடை.. ராஜஸ்தான் பஞ்சாயத்து முடிவால் பரபரப்பு! ஏன் தெரியுமா?
கோண்ட் மலைவாழ் மக்கள் மட்டுமல்லாமல் அவர்களை சுற்றியிருக்கும் 29 சமூக மக்களும் கோண்ட் மக்களின் கடிகார முறையையே பின்பற்றுவார்கள். மேலும் இந்த பழங்குடி சமூகம் மஹூவா, பர்சா ஆகிய மரங்களை தங்களது கடவுளாக வழிபடுகிறார்கள். சத்தீஸ்கரின் இந்த மலைவாழ் கிராமத்தில் வாழும் சுமார் 10,000 பேரும் ரிவர்ஸ் கடிகார சூத்திரத்தையே பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் இனி எவராலும் காலம் பின்னோக்கி செல்லாது என கூற மாட்டார்கள் என எண்ணுவோம்.
ALSO READ:
தேர்தல் களத்தில் பஞ்சாயத்து அதிகாரியின் 3 மனைவிகள்… யாருக்குப் போகும் அவர் வாக்கு?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM