டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது சர்வதேச பயணிகளை கவரும் வகையில் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுமையாக டாடாவிடம் ஒப்படைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், விமான நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவில் இருந்த டாடா, ஏர் இந்தியா விமானத்தை வாங்கினார்.
டாடாவின் பிரம்மாண்ட திட்டம்.. ஏர் இந்தியாவுக்கான பலே வியூகம்.. இனி வேற லெவல்!
ஏர் இந்தியா
இந்த நிலையில் தற்போது டாடாவின் ஏர் இந்தியா விமானம் மிகவும் சிறப்பாக பயணிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில், உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளையும் ஈர்ப்பதற்காக பல்வேறு வகையில் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
புதிய விமானங்கள்
அந்த வகையில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா சர்வதேச பயணிகளை பெறுவதற்காக புதிய விமானங்கள் வாங்க முதலீடு செய்ய இருப்பதாக ஏர்பஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ்
தோஹா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஏர்பஸ் தலைமை வங்கி அதிகாரி கிறிஸ்டின் ஷெரர் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவரிடம் ஏ350 விமான ஆர்டரை ஏர் இந்தியா இறுதி செய்தது? என்ற கேள்விக்கு அவர் அது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
ஏ350 விமானம்
ஆனால் அதே நேரத்தில் ஏர் இந்தியா, ஏ350 விமானத்தை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அனேகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் ஏ350 விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
சர்வதேச பயணிகள்
ஏ350 விமானத்தை ஏர் இந்தியா வாங்கினால் சர்வதேச அளவில் பயணிகளுக்கு சேவை செய்யலாம் என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் கட்டமாக எத்தனை ஏ350 விமானங்களை ஏர் இந்தியா வாங்கும் என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் ஏர்பஸ் தலைமை அதிகாரி கிறிஸ்டின் ஷெஅர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிப்பாதை
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திறமையான நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விமான நிறுவனங்களை பொறுத்தவரை வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால் புதிய விமானங்களை வாங்குவது இயல்பானது என ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ஏர் இந்தியாவின் நிர்வாகிகளிடம் போயிங் மற்றும் ஏர்பஸ் எஸ்இ ஆகிய நிறுவனங்கள் புதிய விமானங்களை ஆர்டர் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்றும், புதிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
Air India to buy new planes to get international passengers!
Air India to buy new planes to get international passengers! | லோக்கல் மட்டும் பத்தாது, இண்டர்நேஷனலும் வேண்டும்: ஏர் இந்தியாவின் சூப்பர் பிளான்