போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார்
இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின் .மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன ,விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன.
மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன