சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
வங்கிகளின் வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய பாதிப்பில்லை என்று ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாங்கிய கடனை செலுத்தவில்லை: பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடும் ஐடிபிஐ வங்கி!
வீட்டுக்கடன் வட்டி
வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை அதிகரித்ததால் ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த விளைவையே ஏற்படுத்தி உள்ளது என்றும் புதிய குடியிருப்பு திட்டங்களுக்கான முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன என்றும் நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்னும் சில நாட்களில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும் என்றும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட்
வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்வு, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வாடிக்கையாளர்களை வீடுகள் வாங்குவதை தடுக்கவில்லை என்றும், கடன் காலத்தை நீடித்தல், கடன் மதிப்பு விகிதத்தை குறைத்தல் ஆகிய இரண்டும் வட்டி விகித உயர்வின் பாதிப்பை கட்டுப்படுத்திவிடும் என்றும் கூறி வருகின்றனர்.
இஎம்ஐ காலம்
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், ‘வீடு வாங்குபவர்கள் தற்போது வீட்டுக் கடனை இன்னும் சில ஆண்டுகளுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் இஎம்ஐ காலத்தை அதிகரித்துக் கொள்வதால் வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்வு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் விற்பனை
1 BHK முதல் 3.5 BHK வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட எம்டிஎல் நிறுவனத்தால் பெங்களூரில் புதிதாக தொடங்கப்பட்ட வீடுகள் அனைத்தும் மூன்றே நாட்களில் விற்று தீர்ந்து விட்டன என்றும் அதே போல் குருகிராமில் இதே நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் ஒரே நாளில் முழுமையாக விற்பனை செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சிறு பாதிப்பு மட்டுமே
சிசிஐ ப்ராஜெக்ட்ஸ் (சிசிஐபிபிஎல்)-ரிவாலி பார்க் இயக்குநர் ரோஹன் கட்டாவ் அவர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘வட்டி விகிதங்களில் திருத்தம் செய்யப்பட்டாலும் தேவை அதிகரிப்பு காரணமாகவும், மலிவு விலையில் வீடுகள் கிடைப்பதன் காரணமாகவும் சிறு அளவு பாதிப்பை மட்டுமே ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படுத்தி உள்ளது என்றும் வீடுகள் வாங்கும் திறனும் தேவையும் இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு
எஃகு, சிமெண்ட், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை இடைவிடாமல் அதிகரித்ததன் காரணமாக, கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டின் விலையை 10-15 சதவீதம் அதிகரித்தது. தற்போதைய பணவீக்கப் போக்குகள் காரணமாக இதுபோன்ற உயர்வுகள் மேலும் தொடரலாம் என்றும் டெவலப்பர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் ரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரை எப்போதும் பணம் கொழிக்கும் ஒரு துறையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
Home loan interest hike will impact real estate business?
Home loan interest hike will impact real estate business? | வீட்டுக்கடன் வட்டி உயர்வால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதிப்பா?