‘ராணுவம்’ என்றால் தன்னை அறியாமலேயே நம் கைகள் கம்பீரமான சல்யூட் அடிக்கும். நாம் அனைவரும் இன்று நாட்டில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இன்றி தினம் தினம் செத்து பிழைக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்றால் ஒவ்வொரு வீரர்களின் தியாகம்தான். ‘என் இந்திய தேசம் இது… ரத்தம் சிந்திய தேசமிது…காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…’ என்று தாய் நாட்டையும், மக்களையும் காப்பதே எங்களது குறிக்கோள் என்று லட்சியத்துடன், உறை பனியில் உடல் வறுத்தி எல்லைகளில் போராடி தங்களது இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்யும் ஒவ்வொரு வீரர்கள் உயிரும் விலை மதிப்பிட முடியாது. அவர்களுக்கு எப்போதும் இந்த தேசம் தலைவணங்கும்.உலகில் 4வது பலமிக்க ராணுவமாக இருக்கக்கூடிய இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது நாட்டில் உள்ள இளைஞர்களின் லட்சியமாக உள்ளது. ராணுவத்தில் இணைய கல்வி தகுதி பெரிதாக தேவையில்லை. உடல் தகுதியும், மன தைரியமும், வீரமும் இருந்தாலே போதும். ராணுவத்தில் பயிற்சி பெற்றாலே ஒழுக்கம், வீரம், துணிச்சல், ரகசியத்தை காப்பது என ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தகுதிகள் அனைத்தும் பெற்றுவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கான வயது வரம்பு 23-27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்ற பட்டப்படிப்பு தேவை. ஆனால், துணை ராணுவத்தில் சேர பள்ளி கல்வி தகுதியே போதுமானது. இதனால், லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக, கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர். * சீனா குடைச்சல்ஒரு நாட்டின் ராணுவ நடவடிக்கைகளில் சீர்திருத்தமோ அல்லது புதிய புதிய திட்டங்கள் கொண்டு வரும்போது நாட்டின் பாதுகாப்பு கருதி எப்போதும் ரகசியம் காக்கப்படும். ஆயுதங்கள் வாங்குவதிலும், போர் விமானங்கள் வாங்குவதிலும், புதிய படைகளை உருவாக்குவதிலும் என முப்படைகளில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் ரகசியம் காக்கப்படும். தற்போது, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு தேவையான கப்பல், போர் விமானம், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இதை கண்டு உலக நாடுகளே இந்தியாவுடன் நட்பை காக்க விரும்புகிறது. இது, அண்டை நாடான சீனாவின் கண்களை உறுத்துகிறது. இதனால், எல்லையில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருகிறது. எல்லையில் போர் பதற்றத்தை உருவாக்கும் வகையில் வீரர்களை குவித்துள்ளது. இளம் வயது கொண்ட வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து எல்லையில் நிறுத்தி உள்ளது.* அக்னிபாதை திட்டம் சீனாவின் அச்சுறுத்தால் இந்தியாவும் எல்லையில் படைகள் எண்ணிக்கை பலப்படுத்தி வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள், உபகரணங்களை எல்லை அருகே குவித்துள்ளது. தற்போது, ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான். இவர்களுக்கு உடல்நிலை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சில சமயங்களில் துடிப்பாகவும், இயல்பான பணியையும் செய்ய முடிவதில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் 20% வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஏராளமானோர் தங்களுடைய பணி காலத்தை நிறைவு செய்யாமல் விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர். கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பாதுகாப்பு படைக்கு வீரர்கள் புதிதாக எடுக்கவில்லை. இதனால், துடிப்பான மிக குறைந்த வயது இளைஞர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிபாடுதான் ஒன்றிய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபாதை’ திட்டம். ‘அக்னிபாதை’ என்ற அறிவிப்பால் இன்று நாடே ‘அக்னி’யாக மாறி உள்ளது.* வெடித்தது போராட்டம் இத்திட்டத்துக்கு எதிராக நாடே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் பாஜ தலைவர்களின் சர்ச்சை பேச்சு, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ‘அக்னிபாதை’ திட்டத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும், வேலையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் திட்டம், 4 ஆண்டு பணி முடித்தபின் ஆயுதங்கள் கையாள்வது கட்டுப்பாடு இல்லாமல் போகும், பாஜவுக்கு என்று ஒரு படையை உருவாக்கும் திட்டம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் அடுக்கி கொண்டே போகிறார்கள். * ரூ.1000 கோடி சேதம் நாடு முழுவதும் போராட்டம் வலுத்ததை தொடர்ந்து, பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. வட மாநிலங்களில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. தென் மாநிலங்களிலும் போராட்டம் நீடிக்கிறது. மோடி உருவபொம்மை எரிக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரயில்வேக்கு சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தினமும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பாதுகாப்பு துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராடி வருகின்றனர். அக்னிபாதை திட்டத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறது. இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல், அமைதி வழியில் போராட வேண்டும் என்று சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 89 ஆண்டுகளாக ராணுவத்தில் எந்த திட்டமும் புதிதாக கொண்டு வரப்படவில்லை என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பு வலுக்கும் நிலையில், இத்திட்டம் 33 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது. முப்படைகளுடன் ஆலோசித்துதான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.* திரும்பு பெற போர்க்கொடிஇத்திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், நான்கு ஆண்டு ராணுவ சேவைக்குப் பின் அக்னி வீரர்கள் முடி வெட்டும் தொழில் செய்யலாம், எலக்ட்ரீஷியன் ஆகலாம், பாஜ அலுவலகத்தில் வாட்ச்மேன் ஆகலாம் என்று ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜ தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், 4 ஆண்டு சேவை முடிந்தபின் அக்னி வீரர்களுக்கு டாடா, மகேந்திரா போன்ற முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும் வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ‘ஆரம்பத்தில் தவறாக தெரியும் சில முடிவும், எதிர்காலத்தில் தேசத்தை கட்டமைக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார். * எதிர்ப்பை மீறி ஆட்சேர்ப்பு இவ்வளவு குற்றச்சாட்டுகள், குழப்பங்கள், விமர்சனங்கள் இருந்தும் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு ஆதரவாக 24ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வரும் நிலையிலும், நாளை மறுநாள் திட்டமிட்டப்படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இன்றுமுதல் கடற்படையில் ஆட்சேர்ப்பு பணி தொடங்குகிறது. ராணுவம் தரப்பிலும் விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.* 2 ஆண்டுகளாக புதிய வீரர்கள் சேர்க்கப்படவில்லைபாதுகாப்பு படையில் ஆள்சேர்ப்பு என்பது கடைசியாக 2019ம் ஆண்டுதான் நடந்தது. 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஆட்சேர்ப்பு நடக்கவில்லை. 2016-2019ம் ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்ந்தவர்களில் எந்த மாநிலத்தினர் அதிகம் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் எவ்வளவு வீரர்கள்1. உத்தரப்பிரதேசம் 18,9062. பஞ்சாப், சண்டிகர் 15,4553. ராஜஸ்தான் 13,1284. மகாராஷ்டிரா 11,8665. அரியானா 10,3826. உத்தரக்காண்ட் 8,9667. இமாச்சல பிரதேசம் 8,7528. பீகார் 7,8579. ஜம்மு காஷ்மீர் 7,44310. மத்திய பிரதேசம் 6,20311. மேற்கு வங்கம் 5,44912. தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி 5,30013. கர்நாடக, லட்சத்தீவுகள் 4,26714. ஆந்திர பிரதேசம் 4,12115. கேரளா 3,72716. குஜராத், தாத்ரா-நகர் அவேலி, டாமன் டையூ 3,33117. அசாம் 2,36018. ஜார்கண்ட் 2,27519. ஒடிசா 1,85320. தெலங்கானா 1,85121. சத்தீஸ்கர் 1,79522. டெல்லி 1,13123. மணிப்பூர் 95824. அருணாச்சல் பிரதேசம் 56825. மிசோரம் 492நேபாள நாட்டில் இருந்து 5,275 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.2016-2019 கால கட்டத்தில் மொத்தம் 1,53,711 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.* வடமாநிலங்களில் போராட்டம் தீவிரம் ஏன்?வடமாநிலங்களில் உயர்கல்வியை முடித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். பள்ளி கல்வியை முடித்துவிட்டு வறுமை காரணமாக குடும்ப சூழ்நிலையை கருதி வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கின்றனர். அதற்கேற்ற உடல் தகுதி கட்டமையத்து கொள்வதால், இன்று பல குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது ராணுவ சேவை செய்து வருகின்றனர். ஆனால், தென் மாநிலங்களில் உயர் கல்வி முடித்தவர்களே அதிகம். அவர்கள் பெரும்பாலானோர் ஐடி நிறுவனங்களிலும், இன்ஜினியர்களாகவும், டாக்டர்கள், வழக்கறிஞர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதனால்தான் நீட்டுக்கு எதிராக வடமாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் இல்லை. அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தென் மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் இல்லை. * எந்த பலனும் இல்லைபிஎஸ்எப், முன்னாள் ராணுவத்தினர் நல சங்க தமிழக தலைவர் னிவாசன் கூறுகையில், ‘நாங்கள் துணை ராணுவத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறோம். எங்களுக்கு மறுவேலைவாய்ப்பு போன்ற எந்த சலுகைகளும் தரவில்லை. குறைந்தபட்சம் மருத்துவ உதவிகளாவது அரசு சார்பில் செய்து கொடுக்கலாம். ஆனால் மாதம் ரூ.1000 கொடுத்து மருத்துவம் பார்த்துக் கொள்ள சொல்கிறார்கள். எல்லையில் போராட அக்னி வீரர்களுக்கு பயிற்சி போதாது. இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பது சிறந்த திட்டம் என்றால், இதுதொடர்பாக விரைவான திட்ட அறிக்கை இல்லை. 4 ஆண்டுகள் முடிந்து செல்லும்போது ராணுவ ரகசியம் காக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. ஆயுதம் கையாள்வது தொடர்பான கட்டுப்பாடு எவ்வாறு விதிக்கப்படும். துணை ராணுவத்தில் பணிபுரிந்த எங்களுக்கே எந்த சலுகைகளும் கொடுக்காத போது, அக்னி வீரர்கள் எவ்வாறு கொடுப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். * பயிற்சி போதுமா?எல்லையில் போராடும் துணை ராணுவத்தினருக்கு 9 மாதங்கள் தீவிர பயிற்சி கொடுத்தே எல்லைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், அக்னி வீரர்களுக்கு முதல் 6 மாதங்கள் ராணுவத்திற்கான எல்லா பயிற்சியும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்கள் பயிற்சி எடுக்கும் வீரர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும்போது, 6 மாதம் பயிற்சி பெறும் அக்னி வீரர்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இந்திய ஆயுதப்படைபடைகள் செயலில் உள்ளவர்கள் இருப்பில் உள்ளவர்கள்ராணுவம் 12,37,117 9,60,000கடற்படை 67,228 55,000விமானப்படை 1,39,576 1,40,000கடலோர காவல்படை 11,000 -எல்லை சாலை அமைப்பு 33,230 -மொத்தம் 14,88, 151 11,55,000துணை ராணுவப் படைகள்அசாம் ரைபில்ஸ் 66,000 -சிறப்பு எல்லை படை 10,000 -மொத்தம் 76,000 -மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் பிறஎல்லை பாதுகாப்பு படை 2,57,363 -மத்திய தொழில் பாதுகாப்பு படை 1,44,418 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை 3,13,678 -இந்தோ-திபெத் எல்லை போலீஸ் 89,432 -தேசிய பாதுகாப்பு காவலர் 12,000 -ஆயுதமேந்திய எல்லைப் படை 76,337 -ரயில்வே பாதுகாப்பு படை 70,000 -தேசிய பேரிடர் மீட்பு படை 13,000 -தேசிய பாதுகாப்பு படை 31,000 – சிறப்பு பாதுகாப்பு குழு 3,000 – மாநில ஆயுத போலீஸ் படைகள் 4,50,000 -சிவில் பாதுகாப்பு – 5,00,000ஊர் காவல் படை – 4,41,800மொத்தம் 14,03,700 9,87,800* வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க அக்னிபாதையா?2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்தபின் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. இதை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், ‘2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கி தராமல், வேலைவாய்ப்பின்மையை அதிகரித்ததுதான் பாஜவின் சாதனை’ என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ இப்போதே பணிகளை தொடங்கி உள்ளது. இதனால், ‘போலியான வாக்குறுதி தந்து, நாட்டின் இளைஞர்களை வேலைவாய்ப்பில்லாத நெருப்பு பாதையில் (அக்னி பாதை) பிரதமர் மோடி நடக்கச் சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைகளை அவர் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், பக்கோடா சுடுவதற்கான அறிவை மட்டுமே அவர் ஏற்படுத்தி உள்ளார்’ என்று பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பிரச்னை தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும் என்பதால் அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.* 2004ல் இருந்தே பென்சன் இல்லைமுன்னாள் ராணுவ வீரர்கள் கூறுகையில், ‘2004ம் ஆண்டுக்கு பின் துணை ராணுவத்தில் சேர்ந்த வீரர்களுக்கு பென்சன் வழங்கப்படுவது இல்லை. ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இதனால், 20 ஆண்டுகள் பணி செய்யாமல் ஏராளமானோர் விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர். பணி காலத்துக்கு பின் எங்களிடம் பிடித்தம் செய்த பணத்தையே திருப்பி கொடுக்கின்றனர். அக்னிபாத் திட்டம் போல் நாங்களும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலைதான் செய்தோம். குடும்பத்தை மறந்து, தாய் நாட்டுக்காக எல்லையில் எதிரிகளுடன் போராடும் எங்களுக்கு எந்த சலுகைகளும் தருவதில்லை. ஒரு முறை எம்எல்ஏ மற்றும் எம்பிக்களாக பணியாற்றினால், வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், துணை ராணுவ படையில் பணியாற்றும் வீரர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுவதில்லை. இது ஒரு செலவாக அரசு நினைக்கிறது. வீரர்களின் தியாகத்தை நினைத்து இதுபோன்ற சலுகைகளை தரவேண்டும்’ என்றனர்.* காத்திருக்கும் சீனாஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு வாரி வாரி கடன் உதவி செய்தது சீனா. இதுதவிர, அவர்கள் கொடுக்க வேண்டிய கடனுக்கு கடன் கொடுத்து உதவியது. தற்போது இருநாடுகளையும் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து உள்ள நிலையில், அவர்கள் பக்கம் கூட தலை வைத்து படுக்க யோசித்து ஒதுங்கி இருக்கிறது. ‘திண்ணை எப்போது காலியாகும்’ என்ற எண்ணத்தில் இருநாடுகளும் எப்போது திவாலாவார்கள், அதை நாமே பிடித்துவிடலாம் என்று காத்திருக்கிறது சீனா. அவ்வாறு நடந்தால், இருநாடுகளையும் பிடித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா வியூகம் வகுத்து வருகிறது.