வேலை செய்யாமல் 7 வருட ஊதியம்.. பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணி.. டிசிஎஸ்-க்கு சுளீர்!

பணி நீக்கம் என்பது நிறுவனங்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டால், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரும், அவரை சார்ந்தோறும் இதனால் எத்தனை பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதை கொரோனா காலத்தில் நிச்சயம் பலரும் பார்த்திருக்கலாம்.

அப்படிப்பட்ட பிரச்சனைகளை கடந்த 2015ம் ஆண்டு டிசிஎஸ் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் எதிர்கொண்டனர்.

அந்த சமயத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆயிரக்கணக்கான டிசிஎஸ் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

டிசிஎஸ்-ல் கொடிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ‘இவர்’களுக்கு மட்டும் ஜாக்பாட்..!

திருவாமலை செல்வன்

திருவாமலை செல்வன்

அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் தான் சென்னையை சேர்ந்த திருவாமலை செல்வன் என்ற ஊழியர். மற்ற ஊழியர்களை போல கண்ணீருடன் வெளியேறாமல், நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாரானார். அதன் பிறகு தான் இது குறித்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

7 வருட சம்பளம் + பணி

7 வருட சம்பளம் + பணி

இந்த வழக்கு குறித்தான தீர்ப்பானது 7 வருடங்களுக்கு பின் வெளியாகிய நிலையில், திருமலைக்கு 7 ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தினை நிறுவனம் செலுத்த வேண்டும், அதோடு அவருக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என டிசிஎஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி பொறியாளர்
 

உதவி பொறியாளர்

திருவாமலை செல்வன் டிசிஎஸ் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணியாற்றியவர். பணி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்தே அவர் ஒரு சாப்ட்வேர் கன்சல்டன்ட் ஆகவும் பணியாற்றி வருகின்றார்.

100 தடவைக்கு மேல்

100 தடவைக்கு மேல்

தனக்கு சரியான நீதி கிடைக்க செல்வன் 100 முறைகளுக்கு மேலாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். FITE அமைப்பானது செல்வனுக்கு இந்த சட்ட முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

நம்பிக்கை கொடுக்கும் தீர்ப்பு

நம்பிக்கை கொடுக்கும் தீர்ப்பு

நீதி எங்கும் உள்ளது. இது ஒரு நம்பிக்கை. ஊழியர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் அனைவருக்கும் இது நினைவூட்டல் என FITE தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது.

ஆரம்பத்தில் செல்வன் நீதிமன்றத்தினை அணுகியபோது, டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் செல்வன் வேலை செய்பவர் என்ற பிரிவின் கீழ் வரவில்லை. அவர் தனது பணியில் மோசமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

 

FITE

FITE

FITE என்பது விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், அசெஞ்சர், ஹெச் சி எல் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த, ஐடி வல்லுனர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS should reinstate the person who was fired and pay him for 7 years: chennai labour court

The court ruled that TCS should reinstate the person who was fired and pay him for 7 years.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.