ஹோம் லோன்: நீங்க முக்கியமா கவனிக்க வேண்டியது இதுதான்!

Home Loan tips: சொந்த வீடு வாங்குவதும், விரும்பியது போல வீடு கட்டுவதும் பலரின் கனவாக உள்ளது. அப்படி நாம் நினைத்து போல ஒரு வீடு வாங்க தற்போதுள்ள நடைமுறையில் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். அதோடு, வீடு வாங்கோ அல்லது கட்டி முடிக்கவோ பல முறை நாம் பரிசீலிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டமிடலும் இருத்தல் வேண்டும்.

இன்று பலர் சொந்த வீடு என்கிற கனவை நனவாக்க பல்வேறு வழிகளில் திட்டமிடுகின்றனர். அதில் ஒன்றாக வீட்டுக் கடன் (ஹோம் லோன்) உள்ளது. இந்த வீட்டுக் கடனை பல அரசு மற்றும் தனியார்க வங்கிகள் வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உங்களுக்கான கடன் தொகை தீர்மானிக்கப்படுகின்றது.

இந்த வீட்டுக் கடன் என்பது ஒரு நீண்ட காலக் கடனாகும். இதற்கென நீங்கள் மாதா மாதம் கணிசமான தொகையை பல ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் முன் சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். அவ்வகையில் நீங்கள் தெரிந்து வைதித்திருக்க வேண்டியவற்றை இங்கு பார்க்கலாம்.

நீங்கள் வீடு வாங்கும் போது, உங்களின் நிதி நிலை, எங்கு வீடு வாங்கப் போகிறீர்கள், கடனை எப்படிச் செலுத்தப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இவை மூன்றையும் சரியான முறையில் திட்டமிடுதலும் வேண்டும்.

வீட்டு கடனில் வீடு வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், வீட்டுக்கான மொத்த செலவில், வீட்டுக்கடன் மூலம் 75-90% வரை நிதி உதவி கிடைக்கும். மீதித் தொகையை நீங்களே செலவழிக்க வேண்டும். எனவே ஆரம்பத் தொகையாக கணிசமான ஒரு தொகையை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முதலில் நீங்கள் செலுத்தும் தொகை அதிகமாக இருக்கும் போது, உங்கள் மாதாந்திரத் தவணை கட்டணம் குறையும்.

இதற்கு தேவைப்படும் பணத்தை நீங்கள் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும். மாதாமாதம் நீங்கள் ஏதேனும் சேமிப்பு திட்டத்தில் கணிசமான தொகையை சேமித்து வந்தால் 4 – 5 ஆண்டுகளுக்குள் அது மிகப்பெரிய தொகையாக உருவாகி உங்களுடைய வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய டவுன் பேமென்ட்டாக மாறும்.

முன்பணத்தைச் சேமிக்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.25,000 செலுத்தினால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 12 சதவீத வட்டியுடன் ரூ.10.9 லட்சத்தைத் திரும்பப் பெறுவீர்கள். கடன் வழங்கும் நிறுவனம் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைச் சரிபார்க்கும். அதன் அடிப்படையில் தான கடன் வழங்கப்படும்.

கிரெடிட் ஸ்கோர்

நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 750 அல்லது அதற்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருப்பது சிறந்தது. அதிக கிரெடிட் ஸ்கோர் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் வலுவாக இருப்பதைக் குறிக்கிறது. அப்படியானால் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். நீங்கள் ஏதேனும் கடன் வாங்கி அதற்கு EMI மூலம் பணம் செலுத்தி வந்தால், அந்தக் கடனை முழுவதுமாக செலுத்தி விடுங்கள். அதிக இஎம்ஐ வைத்திருப்பதால் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிடும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கலாம்.

தேவையான ஆவணங்கள் – சான்றிதழ்கள்

வீடு வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் சொத்துக்கு தேவையான சான்றிதழ்கள், சட்ட ஆவணங்கள் மற்றும் உள்ளூர் அனுமதிகள் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். சரிபார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சொத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதுதான். உங்கள் வீட்டுத் திட்டம் தாமதமானாலோ அல்லது கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, RERAவில் பதிவு செய்யப்படும் போது பாதுகாப்பு கிடைக்கும். உங்களிடம் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகள் இல்லையென்றால், ஹோம் லோன் பெற முடியாது

உரிமை பத்திரம் – வில்லங்கச் சான்றிதழ்

வீடு வாங்கும் முன், சொத்தின் உரிமைப் பத்திரம் மற்றும் உறுதிச் சான்றிதழை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும். இது நிலத்தின் உரிமைப் பத்திரம். சொத்துக்களை மாற்ற அல்லது விற்க யாருக்கு உரிமை உள்ளது என்பதை வில்லங்கச் சான்றிதழ் அடையாளம் காட்டுகிறது. சொத்து ஏதேனும் வழக்குகளில் உள்ளதா, வீட்டின் மீது கடன் இருக்கிறதா என்பது பற்ற தெரிந்து கொள்ள, நீங்கள் உரிமைப் பத்திரத்தைச் சரிபார்க்க வேண்டும். சொத்து சட்டச் சிக்கல்களிலிருந்து விடுபட்டுள்ளது என்பதற்கான சான்றாகவும் இவை செயல்படும்.

ஆவணங்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் உதவியையும் நாடலாம். எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சொத்தில் முதலீடு செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள்.

முத்திரை கட்டணம் – பிற கட்டணங்கள்

நீங்கள் சொத்தை வாங்கும்போது நீங்கள் செலவழிக்க வேண்டிய தொகை, நீங்கள் சொன்ன தொகையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். புதிய சொத்து வாங்குவதில் வேறு சில செலவுகளும் உள்ளன. முத்திரைக் கட்டணம் (5-7%), பதிவுக் கட்டணம் 1-2%, பராமரிப்புக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அனைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது செலுத்தப்படும். மேலும், ரூ.45 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள வீடுகளுக்கு 1 சதவீதமும், ரூ.45 லட்சத்துக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அத்தகைய செலவுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

இவை தவிர, புதிதாக வீடு வாங்கும் முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வீடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கவனமாக மதிப்பீடு செய்தல் வேண்டும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்-சாலை இணைப்பு, விமான நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் சந்தைகள் ஆகியவற்றின் அருகில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். மேலும், வீட்டு கடன் வழங்கும் மற்றும் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது உங்கள் கனவை நோக்கி நீங்கள் முன்னேற உதவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.