சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (20ந்தேதி) 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த 11 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரேநாளில் 11மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், இதவரை 28பேர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பள்ளி மாணாக்கர்களுக்க உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை முடிவை நாடியுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாக உள்ளது. இதுவரை 11 அரசுப்பள்ளி மாணவர்கள், தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், 28 மாணாக்கர்களை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, , நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே மாணாக்கர்களக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்பக்கத்தில் தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் தங்களை நாடலாம் என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பொதுதேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டாம் எனவும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் அதில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பல துறைகளில் வாய்ப்புகள் இருப்பதாகவும், 12ஆம் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பல நீதிபதியாகவும், ஐபி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
5ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12வது வகுப்பு தேர்ச்சி கடும் சரிவு…