10,000 மேற்பட்டோர் பணி நீக்கம்.. ஸ்டார்ட் அப்களால் கண்ணீர் விடும் ஊழியர்கள்..!

சமீபத்திய வாரங்களாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கையானது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் பல தரப்பிலும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் சரிவு பாதைக்கு திரும்பியுள்ளது.

இதன் எதிரொலியினை நிறுவனங்களும் மெதுவாக எதிர்கொள்ள தொடங்கி விட்டன. நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளவும், மார்ஜினை கட்டுக்குள் வைக்கவும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்தியில் இது பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

பணி நீக்கம்

இதன் காரணமாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000 பேருக்கு மேலாக பணி நீக்கம் செய்துள்ளன. 2022ல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் 10,500-க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நிதி திரட்டல் நடவடிக்கை

நிதி திரட்டல் நடவடிக்கை

கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய நிதிகளை திரட்டிய நிலையில், பணியமர்த்தலும் மிகப்பெரிய அளவில் இருந்தது. தேவையும் அதிகம் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் நிறுவனங்கள் போதுமான நிதியினை திரட்ட முடியாமல், தவித்து வருகின்றன. கடந்த ஆண்டில் சம்பள விகிதம் உயர்ந்த நிலையில், ஸ்டார்ட் அப்களின் பணியமர்த்தலை குறைத்துள்ளன. அதிகளவிலான சம்பளமும் கொடுக்க முடியாமல் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

பணி நீக்கம் எங்கு?
 

பணி நீக்கம் எங்கு?

கடந்த ஆண்டுகளில் அதிகளவிலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது பணி நீக்கமும் அதிகரித்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பொறியாளர்கள் மற்றும் உற்பத்தி பிரிவில் பெரியளவில் மாற்றம் இல்லை.

பணி நீக்க நடவடிக்கை

பணி நீக்க நடவடிக்கை

சில தினங்களுக்கு முன்பு சிட்டி மால் 191 ஊழியர்களை பணி நீக்க செய்துள்ளது. இதே அன் அகடாமி ஏப்ரல் 7 மற்றும் ஜூன் 18ல் 750 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. பார்மீஸி 46 பேரையும், ப்ரீத் வெல் பீயிங் – 50 பேரையும், Fareye 250 பேரையும், ரூபீக் – 180 பேரையும், Eruditus 120 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளன. யோஜக் நிறுவனம் 140 பேரையும், தலூபா 40 பேரையும், உதாய் – 100 பேரையும் பணி நீக்கம்செய்துள்ளது.

மே மாதத்தில் ஸ்டார்ட் அப்களில் பணி நீக்கம்

மே மாதத்தில் ஸ்டார்ட் அப்களில் பணி நீக்கம்

இதே மே மாதத்தில் யாரி 150 பேரையும், ப்ரோன்ட்ரோ – 300 பேரையும், எம்பிஎல் 100 பேரையும், எம்ஃபைன் – 500 பேரையும், கார்ஸ் 24 600 பேரையும், வேதாந்து 624 பேரையும், மீஸோ – 150 பேரையும்ம் வெயிர்ஹாட் ஜுர் 800 பேரையும், ட்ரெல் – 300 பேரையும், பிளிங்கிட் – 1600 பேரையும், ஒகேகிரெடிட் 35- 40 பேரையும், லிடோ 900 – 1200 பேரையும், ஓலா – 2100 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

indian startup lay offs cross more than 10,000 mark as companies restructure

Start-ups have been in the process of laying off jobs in recent weeks. Amid the current crisis, Indian start-ups have laid off more than 10,000 people.

Story first published: Tuesday, June 21, 2022, 18:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.