20 ஆண்டுக்கு பின்.. விட்ட இடத்தை பிடித்த டாடா.. மீண்டும் முதல் இடத்தில் வோல்டாஸ்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001ஆம் ஆண்டு வரை ஏசி துறையில் நம்பர் ஒன் இடத்தில் டாடாவின் வோல்டாஸ் நிறுவனம் இருந்தது.

அதன் பின்னர் படிப்படியாக அதன் விற்பனை குறைந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பதும் வெளிநாட்டு நிறுவனங்களின் லேட்டஸ்ட் டெக்னாலஜி தயாரிப்புகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் டாடாவின் வோல்டாஸ் தற்போது மீண்டும் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஒரு ஏசி புரட்சியையே செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது டாடாவின் டிவிடெண்ட் திருவிழா.. 605% வரை வருமானம்.. யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

ஏசி விற்பனை

இந்தியாவைப் பொருத்தவரை ஏசி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகப்பெரிய அளவில் போட்டி போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்டாஸ்

வோல்டாஸ்

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் டாடாவின் வோல்டாஸ் நிறுவனம் 160 சதவீதம் விற்பனையை அதிகரித்து நம்பர் ஒன் இடத்தை பெற்று உள்ளது. குறிப்பாக வீடுகளுக்கான ஏசி விற்பனையில் 170 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த ஏசியின் 25% டாடாவின் வோல்டாஸ் ஏசி தான் விற்பனை ஆகியுள்ளது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு ஏசி நிறுவனங்கள்
 

வெளிநாட்டு ஏசி நிறுவனங்கள்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு நிறுவனங்களான வேர்ல்புல், சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது அப்போது நம்பர் 1 இடத்தில் இருந்த வோல்டாஸ் மிகப்பெரிய சவாலை சந்தித்தது. அதனை அடுத்து எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்பிளிட் ஏசியை இந்தியர்களிடம் அறிமுகப்படுத்திய போது அதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக வோல்டாஸ் நிறுவனம் படிப்படியாக விற்பனையில் சரிவை சந்தித்தது.

விற்பனையில் சரிவு

விற்பனையில் சரிவு

இந்தியாவின் மொத்த ஏசி விற்பனையில் 40 சதவீதத்தை வைத்திருந்த வோல்டாஸ் 2001ஆம் ஆண்டு வெறும் 6% மட்டுமே வைத்திருந்தது. இதன் காரணமாக வோல்டாஸ் நிறுவனம் விற்பனை சரிவுக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தது. மாறி வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப ஏசி மிஷின்களை புதிய மாடல்களில் புதிய தொழில்நுட்பத்தில் வாங்க பொதுமக்கள் விரும்பினார்கள் என்பதை அறிந்து கொண்டது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதனை அடுத்து வோல்டாஸ் நிறுவனம் உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான பெடர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் காரணமாக புதிய தொழிற்சாலை, புதிய டெக்னாலஜி ஆகியவை வோல்டாஸ் ஏசியில் பயன்படுத்தப்பட்டது.

சிறிய வகை ஏசி

சிறிய வகை ஏசி

அதுமட்டுமின்றி முதன்முதலாக இந்தியாவில் பத்தாயிரம் ரூபாயில் சிறிய வகை ஏசியை வோல்டாஸ் அறிமுகம் செய்தது. இதன் காரணமாக ஏர்கூலர் வாங்கும் மக்களை ஏசி வாங்க வைக்க முடியும் என்று வோல்டாஸ் நிறுவனம் கணித்தது. அது நினைத்ததுபோலவே ஏர்கூலர் வாங்கும் மக்கள் பத்தாயிரம் ரூபாயில் சிறிய ஏசியை வாங்கி பயன்படுத்தியதுதான் வோல்டாஸ் நிறுவனத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

மின்கட்டணம்

மின்கட்டணம்

இதனை அடுத்து ஏசி பயன்படுத்தினால் அதிக மின்சார கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்ற மக்களின் சந்தேகத்தை வோல்டாஸ் நிறுவனம் போக்கியது. வோல்டாஸ் ஏசி பயன்படுத்தினால் குறைந்த மின்சாரம் பயன்படுத்தப்படும் என்பதை மக்களின் மனதில் உறுதியாக பதிவு செய்ததற்கான விளம்பரங்களும் வடிவமைக்கப்பட்டது. இதன் காரணமாக படிப்படியாக வோல்டாஸ் ஏசி நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2001ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த வோல்டாஸ் நிறுவனத்தின் ஏசி விற்பனை படிப்படியாக அதிகரித்து தற்போது 2022ஆம் ஆண்டில் 25.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இன்று இந்தியாவில் விற்பனையாகும் நான்கு ஏசிக்களில் ஒன்று வோல்டாஸ் ஏசி என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பர் 1 இடம்

நம்பர் 1 இடம்

இந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் மனம் கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, மாற்று வழியை யோசித்து, புதிய டெக்னாலஜியை பயன்படுத்தியதால் தான் மீண்டும் நம்பர்-1 இடத்தை வோல்டாஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After 20 years TATA in Voltas AC get number one position

After 20 years TATA in Voltas AC get number one position | 20 ஆண்டுகள் கழித்து விட்ட இடத்தை பிடித்த டாடாவின் வோல்டாஸ்: ஒரு ஏசி புரட்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.