2022ல் 5ஜி தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் எத்தனை கோடி தெரியுமா?

2022ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 5ஜி மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்வீடன் நாட்டின் தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் கூறியுள்ளது.

சீனா மற்றும் வட அமெரிக்காவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு உள்பட பல காரணங்களால் உலகில் உள்ள பல நாடுகளில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளது. இருப்பினும் 5ஜி மொபைல் சேவைக்கு உலகளாவிய மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், 5ஜி தொழில்நுட்பத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் சார்பில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெயரையும் பாலினத்தையும் மாற்றிய எலான் மஸ்க் மகன்: என்ன காரணம்?

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 620 மில்லியன் மொத்த சந்தாதாரர்கள் உள்ளனர். அதேபோல் 4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 4.9 பில்லியனாகவும் உள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

5ஜி தொழில்நுட்பம் இன்றைய தலைமுறையினர்மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெறும், எனவே ஆச்ச்சரியப்படும் வகையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.

2025ல் 4.4 பில்லியன்

2025ல் 4.4 பில்லியன்

இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் 4.4 பில்லியனைத் தாண்டும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜி தொழில்நுட்பம்
 

4ஜி தொழில்நுட்பம்

அதேபோல் 5ஜி தொழில்நுட்பம் வருகை காரணமாக 4ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இருக்காது என்றாலும் 4ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 4ஜி தொழில்நுட்பம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் கழித்தே ஒரு பில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ள நிலையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமான ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் இலக்கை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை குறையும்

விலை குறையும்

மேலும் டெலிபோன் ஆபரேட்டர் மற்றும் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் விலையை குறைக்க வழிவகை செய்து வருகிறார்கள் என்பதும் இதுவும் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி

இந்தியாவில் 5ஜி

5ஜி அலைக்கற்றை ஏலத்தை இந்தியா இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள 5ஜி சந்தாதாரர்களின் வளர்ச்சி எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி எதிர்காலம்

5ஜி எதிர்காலம்

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 30 மில்லியன் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும், அதுவே 2023 ஆம் ஆண்டு 50 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ericsson expects 5G subscriptions to cross 1 billion in 2022

Ericsson expects 5G subscriptions to cross 1 billion in 2022 | 5G, Ericsson, subscriptions , 5ஜி, எரிக்சன், சந்தாதாரர்கள்

Story first published: Tuesday, June 21, 2022, 16:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.