சர்வதேச சந்தை சூழ்நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்த மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவுக்குப் பின்பு நேற்று லாபத்திற்குத் திரும்பியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பாதுகாப்பான நிலைக்கு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி மெட்டல் குறியீடு 14 மாத சரிவில் இருந்து அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Jun 21, 2022 11:42 AM
சென்செக்ஸ் குறியீடு 772.71 புள்ளிகள் உயர்ந்து 52,370.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022 11:42 AM
நிஃப்டி குறியீடு 238.05 புள்ளிகள் உயர்ந்து 15,588.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022 11:42 AM
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் India Exposition Mart நிறுவனம் ஐபிஓ வெளியிடச் செபி ஒப்புதல்
Jun 21, 2022 11:42 AM
கெயில் நிறுவனத்தின் CGD மற்றும் கிரீன் ஹைட்ரஜென் சொத்துக்களைப் பணமாக்க மத்திய அரசுத் திட்டம்
Jun 21, 2022 11:42 AM
கெயில் நிறுவனத்தின் சொத்துக்கள் மூலம் 5000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்
Jun 21, 2022 11:42 AM
CLSA இந்தியா புல் – பியர் குறியீடு 92 சதவீதம் சரிவு
Jun 21, 2022 11:41 AM
சுவென் லைப் சையின்ஸ் பங்குகள் 13.39 சதவீதம் உயர்வு
Jun 21, 2022 11:41 AM
சென்செக்ஸ் குறியீடு 52,401.75 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது
Jun 21, 2022 11:41 AM
ஐடி பங்குகள் தொடர் உயர்வு
Jun 21, 2022 11:40 AM
ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jun 21, 2022 11:40 AM
117 கோடி ரூபாய் மதிப்பிலான எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் கைமாறியது
Jun 21, 2022 11:39 AM
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் டாப் ஐந்து பங்குகள் மட்டுமே அவரது போர்ட்ஃபோலியோ மதிப்பில் 75 சதவிகிதமாகும்.
Jun 21, 2022 11:39 AM
இந்த 5 பங்கு முதலீடுகளின் மதிப்பு மட்டும் தோராயமாக ரூ. 19,850 கோடி
Jun 21, 2022 11:39 AM
இந்த 5 பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சுமார் 34 சதவிகிதம் வரை சரிந்துள்ளது
Jun 21, 2022 11:39 AM
டாப் 5 பங்குகள் அவரது மொத்த பங்கு போர்ட்ஃபோலியோவில் ரூ.26,385 கோடியில் 75.20 சதவீதம் ஆகும்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live updates 21 june 2022: recession tata steel bandhan assam floods impact inr usd rupee dollar crude oil bitcoin gold covid
sensex nifty live updates 21 june 2022: recession tata steel bandhan assam floods impact inr usd rupee dollar crude oil bitcoin gold covid 700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 30க்கு 30ம் லாபம்..!