நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று, தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தகவல் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்தி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், எடப்பாடி கே பழனிசாமி தான் அதிமுகவின் தலைமையாக வரவேண்டுமென்று, அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புவதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வரும் 23 ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் ஒரு பக்கம் முயற்சி செய்ய, எடப்பாடி கே பழனிசாமி மறுபக்கம் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தலைமையை ஏற்க வேண்டியதற்கான ஏற்பாடுகளையும், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்ட கூடாது என்று, ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே காவல்துறையிடம் மனு அளித்தும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், கடைசி ஆயுதமாக தேர்தல் ஆணையத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் எடப்பாடி தரப்புக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்து இருந்தாலும், இதறகான சட்டபூர்வ பணிகளை அவர்கள் ஏற்கனேவே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.