அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி கே பழனிசாமி மறுபக்கமும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், எடப்பாடி கே பழனிசாமி தான் அதிமுகவின் தலைமையாக வரவேண்டுமென்று, அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புவதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நேரடியாக எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வருகை தந்து அவருக்கு ஆதரவு கரத்தை நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனக்கு எழுதிய கடிதம் தலைமை கழகம் மூலமாக கிடைத்துள்ளதாக பதில் கடிதம் ஒன்றை எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்றும் எடப்பாடி கே பழனிசாமி உறுதி அளித்து தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.