Cloudflare outage: உலகெங்கிலும் ஒரே நேரத்தில் செயலிழந்த கிரிப்டோகரன்சி தளங்கள்!

Cloudflare outage Internet Down: கிளவுட்ஃப்ளேர் பிழைக் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல முக்கியமான இணையதளங்கள் சிக்கலைச் சந்தித்தன. Cloudflare என்பது உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (CDN) ஆகும்.

டிஸ்கார்ட், கேன்வா, ஸ்ட்ரீம்யார்ட், நத்திங் போன்ற தளங்கள் கிளவுட்ஃப்ளேர் சிக்கலால் சுமார் ஒரு மணி நேரம் செயலிழந்தன. இந்த செயலிழப்பு குறித்து Cloudflare ட்வீட் செய்தது. இப்போது பிழை நீங்கி அனைத்து இணையதளங்களும் நன்றாக வேலை செய்கின்றன என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

எந்தெந்த இணையதளங்கள் சிக்கலைச் சந்தித்தன

கிளவுட்ஃப்ளேர் செயலிழந்த பிறகு, பல இணையதளங்கள் “500 Internal Error” என்ற செய்தியைக் காட்டின. கிளவுட்ஃப்ளேரில் ஏற்பட்ட பிழை காரணமாக Discord, Zerodha, Shopify, Amazon Web Services, Twitter, Canva மற்றும் சில மொபைல் கேம் தளங்கள் செயல்படாமல் நின்றுவிட்டதாக DownDetector தெரிவித்துள்ளது.

Agneepath: அக்னிபாத் திட்டம் குறித்து சர்ச்சை பதிவுகள் – வாட்ஸ்அப் குழுக்களை முடக்கும் ஒன்றிய அரசு!

Udemy, Splunk, Quora, Crunchyroll உடன் WazirX, Coinbase, FTX, Bitfinex மற்றும் OKX போன்ற தளங்களைப் பயன்படுத்தும் போது இதே சிக்கல்களைச் சந்தித்ததாகப் பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஜூன் 2021-இல் இதே போன்ற சிக்கல் ஏற்பட்டது

ஜூன் 8, 2021 அன்று இதே போன்ற சிக்கல் ஏற்பட்டது. Fastley நெட்வொர்க்கின் பிழை காரணமாக, Spotify, Pinterest, Twitch, Reddit போன்ற பல தளங்கள் பாதிக்கப்பட்டது.

Xiaomi Band 7: இது அல்லவா விற்பனை… அறிமுகமாகி சில நாள்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை!

மேலும், CNN, Financial Times, The Guardian, BBC, New York Times போன்ற செய்தி இணையதளங்களும் முடங்கின. ஃபாஸ்ட்லி என்பது ஒரு Content Delivery Network ஆகும்.

உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (CDN – Content Delivery Network) என்றால் என்ன?

உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (CDN) மூலம் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள். பொதுவாக, இந்த நெட்வொர்க் பல சேவையகங்களை இணைக்கிறது.

CDN-இன் முக்கிய செயல்பாடு பயனரை அருகிலுள்ள நெட்வொர்க்குடன் இணைப்பதன் மூலம் விரைவான கண்டண்டுகளை வழங்குவதாகும். ஒரு இணையதளத்தின் வேகம் CDN-ஐப் பொறுத்து இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Yoga Day 2022: உங்களை மகிழ்வுடன் வைக்கும் யோகாசனம்… சிறந்த செயலிகளின் பட்டியலைக் காணுங்கள்

இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், ஸ்டோரேஜ் சர்வர்களில் இருந்து கண்டெண்டுகளை தாமதமில்லாமல் இணையதளத்தில் தேடும் உங்களுக்கு காட்டுவதே CDN-இன் வேலை.

தாமதம் என்பது குறைந்த நேரத்தில் நெட்வொர்க்குடன் இணைப்பதைக் குறிக்கிறது. இதற்கிடையில், Cloudflare இல் உள்ள பிழை சரி செய்யப்பட்டது மற்றும் அனைத்து வலைத்தளங்களும் சரியாக வேலை செய்கின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

இது இரண்டாவது முறை

ஒரு வாரத்தில் Cloudflare செயலிழப்பு தோன்றுவது இது இரண்டாவது முறையாகும். இதனால் பல பயனர்கள் இணையதளங்கள் மற்றும் செயலிகளின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமத்தைச் சந்தித்தனர்.

குறிப்பாக Shopify, Udemy, Zerodha, Canva, Discord, Acko Insurance போன்ற பிரபலமான சேவைகள் CloudFlare இல் வேலை செய்கின்றன. அவர்களின் பயனர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பிரச்சனைக்கான காரணத்தை CloudFlare இன்னும் கூறவில்லை. சில மணிநேர தேக்கத்திற்குப் பிறகு இந்த ஆப்கள் சரியாக வேலை செய்யத் தொடங்கியது என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.