Samsung Galaxy F13 launch date: சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Galaxy F13 போனை ஜூன் 22, 2022 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்துகிறது. நிறுவனம் ஸ்மார்ட்போனை நீலம், பச்சை, இளஞ்சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கொண்டுவருகிறது.
பட்ஜெட் வகையில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு. சாம்சங் கேலக்ஸி எஃப்14 ஸ்மார்ட்போன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவுடன் வெளியாகும்.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, இந்த போன் Flipkart மூலம் விற்பனை செய்யப்படும் என்பது தெளிவாகிறது.
Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி எஃப் 13 பிரதான அம்சங்கள் (Samsung Galaxy f14 features)
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் அமைப்புடன் வருகிறது. தொலைபேசி தானாகவே ஒரு சிம்மில் இருந்து மற்றொரு சிம்மிற்கு டேட்டாவை மாற்றும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாறுதல் பயன்முறையின் உதவியுடன், Wi-Fi அல்லது முதன்மை சிம்மில் நெட்வொர்க் இல்லை என்றால், தொலைபேசி தானாகவே Wi-Fi இலிருந்து மொபைல் தரவுக்கு மாறும். மேலும், மொபைல் டேட்டா முதன்மை சிம்மிலிருந்து இரண்டாம் நிலை சிம்மிற்கு மாறும்.
சாம்சங் கேலக்ஸி எஃப் 13 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Samsung Galaxy f14 expected specs)
Samsung Galaxy F13 ஆனது 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் எக்ஸினோஸ் 850 புராசஸர் (Exynos 850) ஆதரவுடன் வரும்.
சாம்சங்கின் இந்த போனில் புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும்.
Xiaomi Band 7: இது அல்லவா விற்பனை… அறிமுகமாகி சில நாள்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை!
செல்ஃபி, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப்13 சக்தி வாய்ந்த 6000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 15 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும். ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனில் 8 ஜிபி வரை ரேம் ஆதரவு இருக்கும் என்று கூறப்படுகிறது. Samsung Galaxy F13 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நிறுவனம் இந்த போனை ரூ.15,000க்கும் கீழ் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung-Galaxy-F13 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Exynos 850 (8nm)டிஸ்பிளே6.5 inches (16.51 cm)சேமிப்பகம்32 GBகேமரா48 MP + 8 MP + 2 MP + 5 MPபேட்டரி6000 mAhஇந்திய விலை15104ரேம்3 GBமுழு அம்சங்கள்