அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து 8 வது நாளாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் தலைமையேற்க வேண்டும் என்று கூறவில்லை என்று கூறினார்.
மேலும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நேற்று கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கட்சியில் அதிகம் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக மூத்த நீர்வாகி வைத்தியலிங்கம் நேற்று கூறினார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஈரோடு முன்னாள் நிர்வாகி தொடர்ந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளது.
மேலும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும், கட்சி சிறப்பாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும் என திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய தினத்தில் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என தச்சை கணேச ராஜா புகழ்ந்துள்ளார்.
ஓ.பி.எஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இபிஎஸ் இல்லம் வருகை தந்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் .
இபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று அவர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இபிஎஸ்-யை முதன்மை படுத்தும் பதாகைகளை ஏந்தி அவர் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
8ஆவது நாளாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈபிஎஸ் இல்லத்திற்கு மூத்த தலைவர் தம்பிதுரை வைகை தந்துள்ளார். ஓபிஎஸ் இல்லத்திற்கு வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்பி தர்மர் வருகை தந்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு நடைபெறுவதில் சிக்கல் நிலவரும் நிலையில் வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இதை முறியடித்து உங்களின் துணைகொண்டு அதிமுகவை பலம்பொருந்தியதாக மாற்றுவேன். அதிமுக எந்த காலத்திலும் வீந்ததாக சரித்திரம் கிடையாது என்று அதிமுகவின் சமூகவலைதள பிரிவிடம் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
பொதுக்குழுவை நடத்த வேண்டும் 2,300 நிர்வாகிகள் எழுத்து பூர்வமாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிச்சயம் நாங்கள் கலந்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது