Xiaomi Band 7: இது அல்லவா விற்பனை… அறிமுகமாகி சில நாள்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை!

Xiaomi Band 7: சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமி நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு தனது அற்புதமான ஸ்மார்ட் பேண்டை அறிமுகப்படுத்தியது.

சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் பேண்ட் வாடிக்கையாளர்களிடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது, நிறுவனத்தின் பழைய ஸ்மார்ட் பேண்டுகளின் தரம் தான்.

தற்போது இந்த ஃபிட்னஸ் பேண்ட் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், Xiaomi Band 7 ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியனுக்கும்; அதாவது 10 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

இதை குறிப்பிட்டு நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்டின் விலை 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவு என்பது தான் கூடுதல் சிறப்பு.

முக்கிய அம்சங்களாக 1.62 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, உடல் ஆரோக்கியத்திற்கான அம்சங்கள், உடற்பயிற்சி டிராக்கர் போன்றவை இருக்கிறது. சியோமி பேண்ட் 7 குறித்த கூடுதல் விவரங்களைக் காணலாம்.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

சியோமி பேண்ட் 7 விலை (Xiaomi Band 7 Price)

சியோமி நிறுவனம் Xiaomi Band 7 ஸ்மார்ட் பேண்டுகளை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று அடிப்படை வகையாகவும், மற்றொன்று NFC அம்சத்துடன் வருவதாகவும் உள்ளது.

ஃபிட்னஸ் பேண்டின் விலை சீனாவில் 249 யுவான் ஆக உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,900 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வாட்ச் சீனாவில் மட்டுமே கிடைக்கிறது.

Yoga Day 2022: உங்களை மகிழ்வுடன் வைக்கும் யோகாசனம்… சிறந்த செயலிகளின் பட்டியலைக் காணுங்கள்

பிற சந்தைகளில் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சியோமி பேண்ட் 7 அம்சங்கள் (Xiaomi Band 7 Specifications)

இந்த இரண்டு மாடல்களும் 192 x 490 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.62 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, டிஸ்ப்ளே 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை ஆதரிக்கிறது.

புதிய ஸ்மார்ட் பேண்ட் எப்போதும் அணையா டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும், பல உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் அம்சங்களும் இதில் உள்ளன. இது இதய துடிப்பு சென்சார், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

சியோமி பேண்ட் 7 பல விளையாட்டுகளை ஆதரிக்கிறது. இதன் உதவியுடன் விளையாடும் போதும் நம் உடலின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. குறைந்தது இரண்டு வாரங்கள் தாங்கும் அளவுள்ள பேட்டரி இந்த ஸ்மார்ட் பேண்டின் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.