சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. ’23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.