அதி வேகமாக வந்த கார் மோதியதில் டெலிவரி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் சபரிநாதன்(21). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பொருட்களை டெலிவரி செய்வதற்காக சபரிநாதன் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் அதி வேகமாக வந்த கார் சபரிநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று உள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.