சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்ட படி நடத்தலாம் என அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்
பொதுக்குழு கூட்டத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு
தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
தீர்மானம் நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்கள் கொண்டு வரவோ தடை இல்லை – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
பொதுக்குழுவுக்கு தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று பகலில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது
விசாரணைக்கு பின்னர் இடைக்கால உத்தரவு வழங்கப்படுமென நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்திருந்தார்