இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் முதற்கட்டச் சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளது.
கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே பெரியாற்றின் குறுக்கே இடுக்கி அணை உள்ளது.
இந்த அணையில் தேக்கப்படும் நீரைக்கொண்டு 780 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும் நிலையில், 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 800 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கான டர்பைன்களை நிறுவனக் கேரள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.