அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 78.29 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இது ஆசிய நாணயங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?
கடந்த அமர்வில் ரூபாயின் மதிப்பானது 78.13 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
சந்தை சரிவு
வளர்ந்து வரும் சந்தைகளில் சமீபத்திய வாரங்களாகவே பங்கு சந்தைகளானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் முக்கிய அறிக்கைக்கு மத்தியில், இன்றும் பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. மேலும் அமெரிக்க மத்திய வங்கி வங்கியானது மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
டாலர் ஏற்றம்
மேலும் அமெரிக்க மத்திய வங்கி தனது உறுதிபாட்டில் உறுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது வளர்ந்து வரும் சந்தை நாணயங்களுக்கு எதிரான டாலர் இருக்க உதவியது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் ஒரு காரணம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதனால் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகின்றன. இதுவும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பான சரிவினைக் காண ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மேலாகவே இருந்து வருகின்றது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்தினை தூண்டலாம். வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கலாம். இதுவும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்னும் சரிவினைக் காணலாம்
மொத்தத்தில் இனி வரவிருக்கும் நாட்களிலும் ரூபாயின் மதிப்பானது அதிக ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்ததாக 78.45 ரூபாய் வரையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரின் மதிப்பானது 0.32% அதிகரித்து 104.76 என்ற லெவலில் அதிகரித்து காணப்படுகின்றது.
Rupee hits fresh record low of 78.29 against dollar
The Indian rupee depreciated to 78.29 against the US dollar.