நாம் உடல் எடையை குறைக்கும்போது பச்சை காய்கறிகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அதிகம் பேர் கூறிவார்கள். சாலட் செய்து சாப்பிடுவதுதான் சரி என்று கூறினாலும் சில காய்கறி வகைகளை சமைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது எந்த பயனையும் பெரிதாக தராது. ஆனால் அதுவே சமைத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் தரும்.
கீரை வைகைகள்
கீரையை பச்சையாக சாப்பிட்டால் அதில் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கும் . இது இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்தை உடலில் சேர்வதை தடுக்கும். ஆனால் இதுவே சமைத்து சாப்பிட்டால் இதில் உள்ள இரும்பு சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றை நமது உடல் எடுத்துகொள்ள உதவுகிறது. மேலும் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறையும்.
குடைமிளகாய்
பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வகைகளில் இருக்கும் இந்த மிளகாய் வகை, சமைத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். மேலும் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும் அவித்து சாப்பிடுவதைவிட வறுத்து சாப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.
பீன்ஸ்
இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதை சமைத்து சாப்பிட்டால் மட்டுமே நமது உடல் ஆண்டி ஆக்ஸிடண்டை எடுத்துகொள்ளும்.