இலங்கை மத்திய வங்கியால் 20 ரூபா குற்றிநாணயம் வெளியீடு


இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

முதன்முதலில் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு 1871ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் 20 ரூபா  குற்றிநாணயம் வெளியீடு

திருகோணமலை

150 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியால் அதனை நினைவுகூறும்முகமாக 20 ரூபா ஞாபகார்த்த குற்றிநாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட குற்றி நாணயம் நேற்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்மவிற்கு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஸ.சரீப்டீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

நாணயக்குற்றி

நினைவு நாணயக்குற்றி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், உட்பட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட புள்ளிவிபரவியலாளர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியால் 20 ரூபா  குற்றிநாணயம் வெளியீடு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.