ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சனும், நடிகை ஆம்பர் ஹெர்டும் உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டுள்ளதாக லண்டனை சேர்ந்த முக அறுவை சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது.
முக அமைப்பு குறித்து இந்நிறுவனம் கிரேக்க பாரம்பரிய PHI முறையில் நடத்திய ஆய்வில், ராபர்ட் பாட்டின்சனை தொடர்ந்து, ஹென்றி கேவிலும், ஆம்பர் ஹெர்டை தொடர்ந்து, கிம் கர்தாஷியனும் அழகான முக அமைப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.