டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு, ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விற்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ட்விட்டரை எலான் மஸ்கிற்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புக் கொண்டதாக நிறுவன இயக்குனர்கள் குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ட்விட்டர் ஊழியர்களுடன் காணொலி மூலம் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார்.
எலான் மஸ்க் நிர்ணயித்த ஒரு பங்கின் விலையை காட்டிலும், அமெரிக்க பங்குச் சந்தையில் ட்விட்டரின் பங்குகள் விலை குறைந்து காணப்படுவதால், முதலீட்டாளர்கள் பெரு வருவாய் ஈட்ட உள்ளனர்.