அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் கடிதம் மூலம் தெரிவித்தார். அதற்கு பதில் வராத காரணத்தால், பொதுக்குழுவில் தடைவிதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நாளை வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறியப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கக் கூடாது எனவும், அனுமதி மறுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஆவடி காவல் துறையினர் நிராகரித்துள்ளனர். தனிநபரின் உள்ளரங்கில் கூட்டத்தில் நடப்பதால் தடுத்து நிறுத்த முடியாது. உயர் நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.