தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிடமிருந்து கிடைக்க உள்ள உரங்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையவுள்ளன. அத்துடன், ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க முடியும் எனறும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் போகத்திற்குத் தேவையான உரம் அடுத்த மாதம் 6ம் திகதியளவில் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடொன்றை உருவாக்குவது இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.