டாடாவுக்கு போட்டியாக களமிறங்கும் விமான நிறுவனம்: போயிங் விமானத்தை வாங்கி அசத்தல்!

சமீபத்தில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கையகப்படுத்தி அதனை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதும். ஒரு விமான நிறுவனத்தை டாடாவால் மட்டுமே நல்ல லாபத்தோடு நடத்தி செல்ல முடியும் என்று அனைத்து தொழிலதிபரும் வியக்கும் வகையில் அந்நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாடா நிறுவனத்திற்கு போட்டியாக பிரபல தொழிலதிபர் மற்றும் பங்கு முதலீட்டாலர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா அவர்களின் ஆகாசா விமான நிறுவனம் விரைவில் தனது சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஆகாசா ஏர் நிறுவனத்திற்காக முதல் போயிங் விமானத்தை அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளார். இந்த விமானம் தற்போது டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு மோசமான சரிவு.. ஏன்.. என்ன காரணம்?

ஆகாசா விமான நிறுவனம்

ஆகாசா விமான நிறுவனம்

ஆகாசா விமான நிறுவனம் வரும் ஜூலை மாதம் முதல் தனது விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்த இந்த நிறுவனத்திற்காக 72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானம் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானம்

72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானம்

ஆகாசா விமான நிறுவனத்திற்காக முதல் 72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானம் இன்று இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்ததை அடுத்து அந்த விமானத்தை வரவேற்றதாக அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இன்னும் 18 போயிங் விமானங்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக ஆகாசா விமான நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

எரிபொருள் மிச்சம்
 

எரிபொருள் மிச்சம்

72 போயிங் 737 ரக விமானங்களை வாங்குவதற்காக கடந்த ஆண்டே ஆகாஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் எரிபொருளை மிச்சப்படுத்தும் என்பதால் இந்த விமானத்தை இயக்குவதால் ஆகாசா விமான நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய மைல்கல்

முக்கிய மைல்கல்

இதுகுறித்து ஆகாசா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் முதல் விமானத்தின் வருகை நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் மற்றும் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இது எங்களுக்கு மட்டுமின்றி இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கும் ஒரு மைல்கல் என்றும் இந்தியாவின் புதிய சரித்திரம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மலிவு விலையில் பயணம்

மலிவு விலையில் பயணம்

போயிங் இந்தியாவின் தலைவர் சலில் குப்தே இதுகுறித்து கூறியபோது, ‘ஆகாசா ஏர் நிறுவனத்துடன் கூட்டாளியாக இருப்பதில் போயிங் பெருமிதம் கொள்கிறது என்றும், விமானப் பயணத்தை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் மலிவாக மாற்றும் நோக்கில் அவர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Akasa Air welcomes of its first of 72 Boeing 737 Max aircraft from USA!

Akasa Air welcomes of its first of 72 Boeing 737 Max aircraft from USA! | டாடாவுக்கு போட்டியாக களமிறங்கும் விமான நிறுவனம்: போயிங் விமானத்தை வாங்கி அசத்தல்!

Story first published: Wednesday, June 22, 2022, 15:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.