உலகம் முழுவதும் மறுசுழற்சி செய்யப்படும் மொத்த தங்கத்தில் இந்தியா 2001ஆம் ஆண்டில் 75 டன்கள் அல்லது 6.5% மறுசுழற்சி செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தங்க விநியோகத்தில் 11 சதவீதம் பழைய தங்கத்தில் இருந்து வந்தது என்றும் தங்கத்தின் விலை மற்றும் எதிர்கால தங்கத்தின் விலை ஆகிய எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி தங்கத்தை மறுசுழற்சி அதாவது நகைகள் அல்லது வேறு வகைகளில் மாற்றுவது என்பது அதிகம் நடந்து வருவதாகவும் இதற்கு எதிர்கால எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார பின்னணி ஆகியவையே காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை உயரும் போது பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து ஆதாயம் அடைவது, அதன் பிறகு புதிய தங்க நகைகளுக்கு செலவழிப்பதில் வழக்கமாக உள்ளனர். தங்கத்தின் விலை உயரும்போது பழைய நகைகளை மாற்றும் நுகர்வோர்களின் சதவீதம் அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் சமயத்தில் தங்கம்
பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் போது, குறிப்பாக கோவிட் சமயத்தில் ஒவ்வொரு பொது மக்களுக்கும் உதவி செய்தது அவர்கள் சேமித்து வைத்த தங்கம் தான் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கம் மறுசுழற்சி
குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஒரு சதவீதம் அதிகரிப்பு காரணமாக மறுசுழற்சி செய்வது 0.6% என உயர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகை தேவை ஒரு சதவீதம் அதிகரிப்பு என்றால், அதில் மறுசுழற்சி செய்வதில் 0.6% உள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
1800 டன்கள் தங்கம்
கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 300 டன்களாக இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் அது 1800 டன்களாக உயர்ந்து உள்ளது என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
சீனா முதலிடம்
உலக அளவில் தங்கம் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி அதிகம் செய்யும் நாடுகள் குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்ட பட்டியலின்படி சீனா முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 2021ஆம் ஆண்டில் மொத்தம் 168 டன்கள் தங்கத்தை மறுசுழற்சி செய்து உள்ளது.
இந்தியாவுக்கு 4வது இடம்
இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலி 80 டன்கள் தங்கத்தை மறுசுழற்சி செய்துள்ளது. இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ள இந்தியா கடந்த 2021ஆம் ஆண்டில் 75 டன்கள் தங்கத்தை மறுசுழற்சி செய்துள்ளது.
World Gold Council says India is the fourth largest country in gold recycling
World Gold Council says India is the fourth largest country in gold recycling | தங்கத்தில் இதையும் செய்கிறதா இந்தியா? உலகின் 4வது இடத்தை பிடித்து சாதனை!