பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
1958 ஜூன் 20: ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். ‘சான்டல்’ பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.
1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகரின் கவுன்சிலரானார். மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.
2000 மார்ச் 6 – 2002 ஆக. 6 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், 2002 – 2004 மே 16 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2006 – 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவராக இருந்தார்.2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
2010 – 2015 : மயூர்பாஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தார்.
2013 – 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
2015 மே 18 – 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக பணியாற்றினார்.
2022 ஜூன் 21: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வென்றால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமை பெறுவார்.
Advertisement