தீபாவளி ரயில் டிக்கெட்: முன்பதிவு நாளை துவக்கம்| Dinamalar

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர், விரைவு ரயில்களில், நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, 120 நாட்களுக்கு முன்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் 24ம் தேதி, திங்கட்கிழமை வருகிறது. எனவே, 21ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்றே, சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய, பலரும் திட்டமிடுவர். அக்டோபர் 21ல் பயணிக்க விரும்புவோர், நாளை முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22ம் தேதியில் பயணம் செய்ய, நாளை மறு தினம்; அக்டோபர் 23ம் தேதி பயணிக்க, வரும் 25ம் தேதியிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோர், நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக இருப்பதால், வரும் தீபாவளிக்கு அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கிறோம். பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வருவதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தியுள்ளோம். தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.