தைவான் எல்லைக்குள் 29 போர் விமானங்களை அனுப்பிய சீனா!


தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா 29 போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு மூன்றாவது பெரிய ஊடுருவலாக தனது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) 29 போர் விமானங்களை சீனா அனுப்பியதாக தைவான் கூறியுள்ளது.

தைவானின் தெற்கே பரந்த சீனாவின் அந்த குண்டுவீச்சு மற்றும் போர் விமானங்களை ஜெட் விமானங்களைக் கொண்டு தைவான் துரத்தியதாக தெரிவித்தது.

சீன விமானங்களில் பதினேழு போர் விமானங்களும், எலக்ட்ரானிக் போர் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் உட்பட ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும் என்று தைவான் கூறியது.

இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ஹொங்ஹொங்கின் சின்னமான மிதக்கும் உணவகம் 

தைவான் எல்லைக்குள் 29 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

குண்டுவீச்சு விமானங்கள், எலக்ட்ரானிக் போர் மற்றும் உளவுத்துறை சேகரிக்கும் விமானம் ஆகியவை பாஷி சேனல் (Bashi Channel) வழியாக பசிபிக் பகுதிக்குள் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரியில், சீனா 39 ஜெட் விமானங்களை அனுப்பியது, கடந்த மாதம் 30 சீன போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன.

அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபரில், தைவானின் ADIZ-க்குள் 56 சீனப் போர் விமானங்கள் நுழைந்து சாதனை படைத்தன.

இதையும் படிங்க: வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ராக்கெட்: உற்சாகத்தில் தென் கொரியா 

தைவான் எல்லைக்குள் 29 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

தைவானை, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா கருதுகிறது, தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக ஒன்றிணைக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு தைவான் மீண்டும் மீண்டும் சீன ஊடுருவல்களை எதிர்கொண்டது, இது தைவானின் படைகளை அழிக்க வடிவமைக்கப்பட்ட “சாம்பல் மண்டல” போர் என்று Tsai Ing-wen அரசாங்கம் கூறுகிறது.

தைவான் எல்லைக்குள் 29 போர் விமானங்களை அனுப்பிய சீனா!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.