தனியார்துறையில் பணிபுரிகின்றவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவிற்கு ஏற்றவாறு தனியார்துறையில் பணிபுரிகின்றவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு தேவையான சட்ட விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…..
நாம் நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீன உலகிற்கு ஏற்ற தொழில்களை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களை அதிகரிக்கவும்இ அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்இ சட்ட விதிகளை மாற்றி வேலை தரத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆண்இ பெண் பாகுபாடு காட்டும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆண்இ பெண் பாகுபாடின்றி தொழில் புரிகின்ற உலகை நாம் உருவாக்க வேண்டும்.
நவீன உலகை கட்டி எழுப்பும் போது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குஇ நாம் தொழிற் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
தொழிலாளர்கள் தமது வாழ்வை இந்த நாட்களில் பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றார்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மையான கதை. உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருளை பெறுவதில் சிரமம். இதனால் தனியார்துறை ஊழியர்களின் குறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
அதன்படி, எதிர்காலத்தில் நிலையான குறைந்தபட்ச சம்பளத்தை விதித்து, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உறுதியான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதியான சம்பள உயர்வை வழங்க வேண்டும். அதற்காக அமைச்சு முன் நின்று, அவர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.