சென்னை தண்டையார்பேட்டையில், குடும்ப சண்டையில் மனைவியை கொன்று வலிப்பு நோயால் அவர் இறந்ததாக கூறி நாடகமாடிய கணவனை, போலீசார் கைது செய்தனர்.
நேதாஜி நகரை சேர்ந்த சாகுல் அமீதுக்கும், அப்ரின் ரோசுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதியன்று, வலிப்புநோய் ஏற்பட்டு அப்ரின் மயக்கமடைந்ததாக கூறி, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சாகுல் அமீது கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், அப்ரின் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், புகாரின் பேரில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அப்ரின் ரோஸ் கழுத்து நெறிக்கப்பட்டு, தலையணையால் அழுத்தி கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், நகை வாங்கி தரக்கேட்டு தொல்லை செய்த மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.