நீதிமன்ற தீர்ப்பையடுத்து அதிமுக பொதுக்குழு ஆயத்த பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சார்பில் நாளை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருநட்த நிலையில், பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பொதுக்குழுவிற்கான ஆயத்த பணிகள் வேகம் எடுத்துள்ளது. பொதுக்குழு நடக்க உள்ள மண்டபத்தின் முகப்பு பகுதியில் நாடாளுமன்றத்தின் முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருப்பது போன்றும் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு கூட்டம் என்றும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரது படங்கள் பொறிக்கப்பட்டு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆங்காங்கே பேனர் வைக்கும் பணி விறு விறுப்பு அடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றம் போல் முகப்பு பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவு குறித்து பேசிய ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான பிறகு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்தில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று குறிப்பிட்டார்கள் இன்று தர்மம் வென்று இருக்கிறது என பதில் அளித்துள்ளார்.
மேலும், பொதுக்குழுவுக்கு தான் முடிவு செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற அவர், பொதுக்குழுவின் தீர்மானங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM