பணக்கார நாடுகள் எனப் பீத்திக்கொள்ளும் பல நாடுகளைப் பணவீக்கம் தற்போது நடுநடுங்க வைத்துள்ளது என்பது தான் உண்மை. அந்த வகையில் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கும் இந்தியாவிற்குச் சற்றுக் கூடுதலான பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதால், ரிசர்வ் வங்கி முன்கூட்டியே தனது நாணய கொள்கையில் மாற்றங்களை அறிவித்து வருகிறது.
709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!
இந்த நிலையில் நாட்டின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி இத்துறை நிறுவனங்களுக்கும், வர்த்தகத்திற்கும் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐடிசி அறிக்கை
இந்தியாவில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்து இருக்கும் பணவீக்கம் மூலம் அடுத்த சில காலத்திற்குப் பல்வேறு சவால்கள் பல முக்கியமான பிரிவுகளில் எப்எம்சிஜி துறை எதிர்கொள்ள உள்ளது என ஐடிசி புதன்கிழமை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் விலை
நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகப்படியான விலைவாசி ஆகியவை நுகர்வோர் சந்தையில் டிமாண்ட் குறைந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் ஒவ்வொரு குடும்பங்களும் பொருட்கள் வாங்கும் அளவீடு குறைந்து ஒட்டுமொத்த எப்எம்சிஜி துறையின் வளர்ச்சியின் வேகம் குறையும் என அறிவித்துள்ளது.
முக்கியப் பொருட்கள்
இந்த ஆண்டு, சமையல் எண்ணெய்கள், பேக்கேஜிங் பொருட்கள், சோப்பு நூடுல்ஸ், எரிபொருள், தளவாடங்கள் போன்ற முக்கிய உள்ளீடுகளின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. இது பொருளாதார விளிம்புகளில் இருக்கும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என ஐடிசி தெரிவித்துள்ளது.
எப்எம்சிஜி நிறுவனங்கள்
இந்த நிலையைச் சமாளிக்கப் பெரும்பாலான எப்எம்சிஜி நிறுவனங்கள் தற்போது பொருட்களின் அளவு அல்லது எடையைக் குறைத்து அதேவிலையில் விற்பனை செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பொதுவாகப் பொருட்களின் விலையைக் கூட்டும் ஆனால் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் பொருட்களின் விலையைக் கூட்டினால் வாடிக்கையாளர்கள் இழக்க நேரிடும்.
Inflation pose big challenges leads to moderation in growth for near term
Inflation pose big challenges leads to moderation in growth for near term நுகர்வோர் சந்தையில் மாற்றம்.. முன்கூட்டியே எச்சரிக்கும் ஐடிசி..!