பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் அங்கு நான்கு அல்லது ஐந்து பலாத்கார புகார்கள் எழுவதாக கூறப்படுகிறது. பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுக்கப்படும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.