மஹாராஷ்டிராவில் ஆளுங்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 46 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில் 2019இல் நடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. ஆனால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற நாற்காலி சண்டையில் கூட்டணி உடைந்தது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அவரது ஆட்சிக்கு இதுவரை ஆபத்து ஏற்படாத நிலையில், தற்போது அம்மாநில மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 46 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ளதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா அரசியல் களம் சூடாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் மேலும் 4 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மாநில பாஜக தலைவருடன் கவுகாத்திக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு உறுதியாக கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சில முக்கியமான தகவல்கள்..
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்தனர்
நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிவருகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே
7 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ஏக்நாத் ஷிண்டே
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இந்துத்துவா ஆதரவு கொள்கைகள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலனை செய்யுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்பி பாவனா காவ்லி வலியுறுத்தல்
அதிருப்தி எம்எல்ஏக்களால் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ள நிலையில் சட்டப்பேரவையை கலைக்கும் சூழல் உருவாகியுள்ளthu – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்
இதையும் படிக்கலாம்: சோதனைகளை சாதனையாக்கிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு – முழு பின்னணி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM